ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி வரை அதிர்வு உணரப்பட்டது

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-01-11 09:45 GMT

கோப்பு படம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதேபோல், காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 - ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக டெல்லி, காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

எனினும், உயரமான  அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஐடி கம்பெனிகள் உள்பட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் நில அதிர்வால் அச்சம் அடைந்து  கட்டிடங்களுக்கு வெளியே  குவிந்தனர். இதனால், டெல்லி உள்பட பல்வேறு வட இந்திய நகரங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்