முக்கிய சாலைகளில் பள்ளி-கல்லூரி வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை

பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்கள் அந்தந்த கல்வி நிறுவனங்கள் முன்பு நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Update: 2022-07-21 20:33 GMT

பெங்களூரு:


பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகள் முன்பாக இருக்கும் முக்கிய சாலைகளில், அந்த பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு வாகன ஓட்டிகள் புகார் அளித்திருந்தனர்.


இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தங்களது பிள்ளைகளை விடுவதற்காக வரும் பெற்றோர் எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பாக உள்ள சாலைகளில் பள்ளி வாகனங்களை நிறுத்த கூடாது என்றும், சம்பந்தப்பட்ட வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் பள்ளி, கலலூரிக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்