போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவதால் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம்; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சொல்கிறார்

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுவதால் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம் என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-16 21:30 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதுடன், அந்த வாகனங்களை டோயிங் செய்து தூக்கி செல்வது வழக்கம். இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பெங்களூருவில் தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினாா்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதன்காரணமாக தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்று, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் வாகனங்களை டோயிங் செய்வது அவசியம். அதே நேரத்தில் டோயிங் செய்வதற்காக புதிய வழிகாட்டுதல்களும் தேவையாகும். இதுதொடர்பாக அரசுடன் ஆலோசித்து, வாகனங்களை டோயிங் செய்வதற்காக புதிய விதிமுறைகளை வகுப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்