பெங்களூருவில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பெங்களூருவில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெஸ்காம் (ெபங்களூரு மின்வாரிய கழகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூருவில் சில பகுதிகளில் உள்ள மின்கம்பி சரிசெய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும். கசமரனஹள்ளி, ஒயிட்பீல்டு, உன்சூர், ராம்குண்டனஹள்ளி, வர்த்தூர், காச்மரனஹள்ளி, அலசஹள்ளி சாலை, பெலகெரே, அகத்தூர், மாதூர்நகர், எம்.பி.எஸ். டெக்பார்க் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மேலும், வின்ட் டனல் சாலை, முருகேஷ்பாளையா, எச்.எஸ்.ஆர்.லே-அவுட், அசோக் அவென்யூ, கே.ஆர். கார்டன், தொம்லூர், வெளிவட்ட சாலை, அமர்ஜோதி லே-அவுட் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.