இன்று பாஜக ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை காட்டுகிறது - ஆனால் நாளை...? -மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பபானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பபானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது ;
இன்று பாஜக அதிகாரத்தில் இருப்பதால் , விசாரணை அமைப்புகளை வைத்து அதிகாரத்தை காட்டுகிறது.நாளை நீங்கள் அதிகாரத்தில் இல்லாதபோது, இதே விசாரணை அமைப்புகள், வீட்டுக்குள் புகுந்து உங்களை காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும். அந்த நாள் விரைவில் வரும்.
துர்கா பூஜையின் போது, அசுரனுக்குப் பதிலாக மகாத்மா காந்தியைப் போன்ற சிலை காட்சிப்படுத்தப்பட்டது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ? இதுபோன்ற வெட்கக்கேடான செயலுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஆனால் பூஜையின் போது எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.என தெரிவித்தார்.