தெருநாய்களை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

தெருநாய்களை பாதுகாக்க போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-06 21:57 GMT

பெங்களூரு: பெங்களூருவில் தெருநாய்கள் உள்ளிட்ட பிராணிகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு பெண் 8 நாய்களை சாக்கடை கால்வாயில் வீசி கொன்றார். ஒரு வாலிபர், தெரு நாய் மீது காரை ஏற்றிக் கொன்றார். மேலும் தெருநாய்களை வாகனங்களில் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும் சம்பவம், அவற்றின் மீது பட்டாசுகளை கொளுத்திப் போடும் சம்பவம் உள்ளிட்டவை அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார். அதில் தெருநாய்களை பாதுகாக்கும் பொருட்டும், அவைகள் மீது நடக்கும் கொடுமைகளை தடுக்கவும் போலீஸ் அதிகாரிகளை பிராணிகளை காக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக அரசு நியமிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பிராணிகளை காக்கும் பொறுப்பும் வழங்கப்படுகிறது என்றார். ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்