தசரா விழாவில் கலந்துகொள்ள மைசூரு மன்னர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அழைப்பு
தசரா விழாவில் கலந்துகொள்ள மைசூரு மன்னர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நேரில் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மைசூரு:
சரித்திர புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நாளை(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த நிலையில் தசரா விழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி அரசு சார்பில் மன்னர் குடும்பத்துக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் அரசு சார்பில் தசரா விழாவில் கலந்துகொள்ளும்படி மன்னர் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் கலெக்டர் பகாதி கவுதம், மேயர் சிவக்குமார் ஆகியோர் மைசூரு அரண்மனைக்கு சென்று ராணி பிரமோதா தேவி, மன்னர் யதுவீர் ஆகியோரை சந்தித்து பாரம்பரிய முறைப்படி பூ, பழம் வைத்து அழைப்பிதழ் மற்றும் பூங்கொத்து கொடுத்து தசரா விழாவில் கலந்துகொள்ள வரும்படி அழைப்பு விடுத்தனர்.