கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்

கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-28 19:00 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். ஆட்டோ டிரைவரான இவரை கடந்த மாதம் மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு உடலை அதே பகுதியில் உள்ள கால்வாயில் வீசி சென்றனர். இதுவரையில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனாலும் கூட கொலை குற்றவாளிகளை போலீசார் பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்து ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கொப்பா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும், இல்லையென்றால் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மதுசூதனிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்