ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் ரூ.40 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு

மும்பையில் இருந்து உடுப்பி வந்தபோது ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் ரூ.40 லட்சம் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-12-07 18:45 GMT

மங்களூரு:-

ரூ.40 லட்சம்

உடுப்பி கடப்பாடியை சேர்ந்தவர் தீபா ராய். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுப்பியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தீபா ராய், கடந்த 5-ந்தேதி மும்பையில் இருந்து உடுப்பிக்கு ரெயிலில் வந்தார்.

கடந்த 6-ந்தேதி உடுப்பி ரெயில் நிலையத்தில் இறங்கி கடப்பாடிக்கு செல்ல முயன்றார். அப்போது அவர் பையை சோதனை செய்தார். அப்போது பையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருந்தது. அதாவது ரூ.34 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.6 லட்சம் மதிப்பிலான வைர நகைகளும் மாயமாகி இருந்தது. இதனால் தீபா ராய் அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ரெயிலில் அயர்ந்து தூங்கும்போது யாரோ மர்மநபர்கள் பையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தீபா ராய் மணிப்பால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொங்கன் ரெயில்வே எல்லையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொங்கன் ரெயில்வே எல்லையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்