டிக்கெட் இல்லாத ரெயில் பயணிக்கு அடி-உதை ரெயில்வே அதிகாரிகள் பணியிடை நீக்கம்
பீகாரில் கடந்த 2-ந்தேதி டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளாா்.
பாட்னா,
பீகாரில் கடந்த 2-ந்தேதி டிக்கெட் இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளாா். ரெயில் மும்பை-ஜெயநகர் முசாபர்பூர் ரெயில்வே நிலையத்தை கடந்த பிறகு, அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் பயணியிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டுள்ளதாகத்தெரிகிறது. அந்த பயணி அவரிடம் டிக்கெட் இல்லாமல் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அங்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் 2 பேர் அந்தப்பயணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்தப்பயணிக்கு முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயணியை தாக்கிய 2 ரெயில்வே அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.