திருமணமான பெண்ணை மிரட்டி 2 ஆண்டுகளாக கற்பழிப்பு; போலீஸ் ஏட்டு கைது

புகார் அளிக்க வந்தபோது பழக்கமான திருமணமான பெண்ணை மிரட்டி 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-21 19:30 GMT

சிவமொக்கா;


பழக்கம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி ஒலேஒன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ராகவேந்திரா. இந்த போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்ராவதி தாலுகா மைதொளலு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார்.

அப்போது ஏட்டு ராகவேந்திராவுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு தினமும் பேசி பழகி வந்துள்ளனர். அந்த பெண் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

அவர் பெங்களூருவில் இருந்து பத்ராவதிக்கு வரும்போதல்லாம் அவர்கள் காரில் சுற்றி திரிந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.

பலாத்காரம்

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ராகவேந்திரா, அந்த பெண்ணை பத்ராவதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணை மிரட்டி பலமுறை ராகவேந்திரா கற்பழித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண் வெளியே யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

போலீஸ் ஏட்டுவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து சென்றதால் அந்த பெண் மனமுடைந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணை உல்லாசமாக இருக்க ராகவேந்திரா அழைத்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால், ராகவேந்திரா அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

போலீஸ் ஏட்டு கைது

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பத்ராவதி நியூ டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஏட்டு ராகவேந்திராவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்