"நோட்டு, புத்தகத்துடன் இருக்க வேண்டியவர்கள் வெட்டு, குத்து என இருக்கிறார்கள்" - தமிழிசை வேதனை
நாங்குநேரி சம்பவம் மனவேதனையை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
நாங்குநேரி சம்பவம் குறித்து புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: நாங்குநேரி சம்பவம் மனவேதனையை அளிக்கிறது. அறிவாற்றலை பெற வேண்டிய மாணவர்கள் அரிவாளை தூக்கியுள்ளனர். நோட்டு, புத்தகத்துடன் இருக்க வேண்டியவர்கள் வெட்டு, குத்து என இருக்கிறார்கள்.
இதில் தவறு எங்கே நடக்கிறது என்பதை அறியவேண்டிய சூழலில் இருக்கிறோம். இதுபோன்ற சூழல் இனி நடக்கக்கூடாது என அனைவரும் சிந்திக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.