நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அதனை திருப்பி தர வேண்டும்: பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2024-02-05 15:45 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு இன்று உரையாற்றினார். அப்போது, அவர் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசும்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் விசாரணை அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன என கூறினார். ஊழலுக்கு எதிராக இன்று அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதற்கு எதிராக பெரும் கொந்தளிப்பு காணப்படுறது என்றும் கூறினார்.

நம்முடைய நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் பற்றி விவாதங்கள் நடந்தன. ஒவ்வொரு முறையும், அவையில் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்படும். ஆனால், ஊழலுக்கு எதிராக இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என பேசியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்க துறையினர் முடக்கிய சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி. எனினும், எங்களுடைய ஆட்சி காலத்தில், அமலாக்க துறையினர் முடக்கிய சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என அவர் கூறியுள்ளார். நீங்கள் (ஊழல் குற்றவாளிகளான எதிர்க்கட்சி தலைவர்களை குறிப்பிட்டு), கொள்ளையடித்த பணம், திருப்பி தரப்பட வேண்டும். நாட்டை மோசடி செய்ய நான் அனுமதிக்கமாட்டேன் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்