70 வயது மூதாட்டியும் கற்றுக்கொண்டார் முற்றிலும் இந்தி தெரிந்தவர்களை கொண்டதாக மாறும் கேரள கிராமம்
கேரளாவின் ேகாழிக்கோடு மாவட்டத்தின் சிறிய ஊராட்சி, ெசலன்னூர். இந்த கிராம மக்கள் அனைவரும் இந்தி கற்று வருகின்றனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் ேகாழிக்கோடு மாவட்டத்தின் சிறிய ஊராட்சி, ெசலன்னூர். இந்த கிராம மக்கள் அனைவரும் இந்தி கற்று வருகின்றனர். இதில் முக்கியமாக ஜானகி அம்மா என்ற 70 வயதை கடந்த மூதாட்டியும் ஆசிரியர் மூலம் இந்தி கற்று வருகிறார்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்துக்கு முன்பாக, இந்த கிராமம் முற்றிலும் இந்தி தெரிந்தவர்களை கொண்ட கிராமமாக மாறும் என செலன்னூர் ஊராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அது கேரளாவின் முதல் கிராமம் மட்டுமின்றி, தென் இந்தியாவிலேயே முதல் ஊராட்சி என்ற பெருமையையும் பெறும்.
கிராமத்தில் உள்ள மனித வளத்தைப் பயன்படுத்தி குறைந்த நிதியில் ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் ஊராட்சிப்பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளதால்தான் இந்தி கற்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக மற்றொரு தகவலும் உள்ளது.
தமிழகத்தை ேபால கேரளாவும் தீவிர இந்தி எதிர்ப்பை கடைப்பிடித்து வருகிறது. இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு ஒரு கிராமமே இந்தி கற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.