டெல்லி மாநகராட்சி தேர்தல்: உலகின் மிகப்பெரிய கட்சி தோற்க்கடிக்கப்பட்டுள்ளது - மணீஷ் சிசோடியா

இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2022-12-07 10:22 GMT

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியையடுத்து டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ள அம்மாநில முதல்-மந்திரியும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை மிகப்பெரிய வெற்றியாக பார்க்காமல்,மிகப்பெரிய பொறுப்பாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்