அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்: ஊக்கம் அளிக்கும் வகையில் 'காக்கி' - அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை பகிர்ந்த மத்திய மந்திரி...!

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Update: 2023-03-15 10:04 GMT

புதுடெல்லி,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, தன் பணிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள், சந்தித்த மனிதர்கள், போலீசாரின் அன்றாட பணிகள், அவர்களுக்குள் இருக்கும் மனித நேயம் என பசுமையான நினைவுகளை தொகுத்து, 'காக்கி' என்ற, புத்தகத்தை கடந்த 2021ம் ஆண்டு எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்தை சமூகவலைத் தளப்பக்கத்தில் பகிர்ந்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியிருப்பதாவது:

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் பணிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து அழகாக எழுதியுள்ளார். இது அதிகம் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்