இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-29 18:45 GMT

பெங்களூரு:


பெங்களூரு விவேக்நகர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக மங்கமனபாளையாவை சேர்ந்த யாசின் பாஷா (வயது 19) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி யாசின் திருடி விற்றது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 13 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான யாசின் மீது விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்