இளம்பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் கேட்டு மிரட்டிய வாலிபர்

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி, இளம் பெண்ணிடம் இருந்து ரூ.70 ஆயிரம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-24 18:45 GMT

பெங்களூரு-

பெங்களூருவில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் தனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை பென்டிரைவில் சேமித்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் தனது பென்டிரைவை தவறவிட்டு இருந்தார். அந்த பென்டிரைவை எடுத்த ஒரு வாலிபர், இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

இளம்பெண்ணிடம் உனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் என்னிடம் உள்ளது என்றும், அதை வெளியிடாமல் இருக்க ரூ.70 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன இளம்பெண் தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை மிரட்டியதாக சோயிப் முகமது என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பெண்ணுக்கு சொந்தமான பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்