சோமேஸ்வருக்கு சுற்றுலா சென்றபோது கடல் அலையில் சிக்கி பெண் பரிதாப சாவு

மைசூருவை சேர்ந்தவர் சோமேஸ்வருக்கு சுற்றுலா சென்றபோது கடல் அலையில் சிக்கி பெண் பரிதாப சாவு

Update: 2022-05-28 16:24 GMT

மங்களூரு;

மைசூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 45). இவர் தனது 3 மகள்கள், பேத்தி ஆகியோருடன் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள சோமேஸ்வர் கடலுக்கு குளிக்க சென்றனர்.


அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலையில் பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினர் சிக்கி நீரில் தத்தளித்தனர். அவர்களில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர்.

இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கடலில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பாக்கியலட்சுமி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்