பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்

சிவமொக்காவில் பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-15 20:38 GMT

சிவமொக்கா:-

குண்டர் சட்டம்

சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அமைதி மிகவும் முக்கியம். சிவமொக்காவில் கடந்த சில மாதங்களாக பொது அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்கள் நடந்தன. இனிமேல் அதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சிவமொக்காவில் பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு நேர ரோந்து

சிவமொக்காவில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 45 பேரை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் 45 பேரும் மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நகரில் அசம்பாவிதங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்