தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு
சிக்கமகளூருவில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்படைய தங்க நகைகள் திருட்டிய மா்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறாா்கள்.
சிக்கமகளூரு :-
சிக்கமகளூரு(மாவட்டம்) தாலுகா வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கமலம்மா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கமலம்மா தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து வீடு திரும்பிய கமலம்மா தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பாா்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 150 கிராம் தங்க நகைகளை காணவில்லை.
அதனை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கமலம்மா சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.