உயர்ரக மதுபானங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்- கர்நாடக அரசுக்கு மதுபான சங்கம் கோரிக்கை

உயர்ரக மதுபானங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மதுபான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-06-24 17:07 GMT

பெங்களூரு: இந்தியாவின் சர்வதேச மதுபான மற்றும் ஒயின்ஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கர்நாடகத்தில் இந்திய ரக மதுபானங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் விலையில் வேறுபாடு உள்ளது. அதனால் இந்திய ரக மதுபானங்கள் விற்பனை மிக அதிகமாக உள்ளது. உயர்ரக மதுபானங்கள் விற்பனை கடந்த 4, 5 ஆண்டுகளாக வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக கர்நாடகத்தில் உயர்ரக மதுபான வகைகள் அதிகளவில் விற்பனை ஆகும். ஆனால் வரி அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்துவதை குறைத்துவிட்டனர்.

கர்நாடகத்தில் உயர்ரக மதுபானங்கள் விற்பனைக்கு நல்ல சூழல் நிலவுகிறது. ஆனால் அதிகப்படியான வரியால் அதன் விற்பனை சரிந்துவிட்டது. இந்தியாவில் கர்நாடகத்தில் தான் வரி அதிகமாக இருக்கிறது. அதனால் மதுபானங்கள் மீதான வரியை முறைப்படுத்த வேண்டும். உயர்ரக மதுபானங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்