கோர்ட்டு உத்தரவை அவமதிப்பு செய்த வழக்கு மனுதாரருக்கு, தாசில்தார் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; ஐகோா்ட்டு உத்தரவு

கோர்ட்டு உத்தரவை அவமதிப்பு செய்த வழக்கில் மனுதாரருக்கு, தாசில்தார் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-10 18:45 GMT

பெங்களூரு:

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா குரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பர்வதம்மா (வயது 69). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் நிலங்கள் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட தாசில்தார் பிரமோத் பட்டீல், நிலஅளவையர் மஞ்சேஸ்ரீ, நகரசபை கமிஷனர் மனிஷ் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.மேலும், மனுதாரர் அதற்காக ஆவணங்களை சமர்ப்பித்த நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் பணிகளை தொடங்கி, முடிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் மூதாட்டியின் நிலத்தை யாரும் அளவீடு செய்யும் பணிகளை தொடங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஐகோர்ட்டின் உத்தரவை தாசில்தார் உள்பட 3 பேரும் அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி அந்த மூதாட்டி ஐகோர்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதாவது, மனுதாரர் ஆவணங்கள் சமர்படபித்த அடுத்த 9 மாதங்களுக்குள் நிலத்தை அளவு எடுக்கும் பணியை தொடங்கி, முடிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அந்த பணிகளை யாரும் தொடங்காமல் இருந்துள்ளனர்.அவமதிப்பு மனு தாக்கலுக்கு பின்னர், பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது ஐகோர்ட்டு மற்றும் நீதிபதியில் உத்தரவை மதிக்காமல் இருப்பது நிரூபணமாகி உள்ளது. எனவே அளவு எடுக்க உத்தரவிடப்பட்ட காலத்தில் தாசில்தாரா பணி செய்த பிரமோத் பட்டீல், மனுதாரருக்கு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்