முதலிரவு அறைக்குள் சென்ற புது மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு

காதலித்து திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை முதலிரவின் போது மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-15 08:56 GMT

ஐதராபாத்,

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்தும் மதன பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கடந்த 13ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் ஏற்பாடு செய்து வெளியேறினர். இதனையடுத்து முதலிரவு அறைக்குள் சென்ற கனவுகளுடன் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்