சிறந்த மனிதனை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது- மந்திரி ெசலுவராயசாமி பேச்சு
சமுதாயத்தில் சிறந்த மனிதனை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
மண்டியா:-
ஆசிரியர்கள் தின விழா
மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அவரது பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதேபோல், மண்டியா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து, பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா அம்பேத்கர் பவனில் நடந்தது.
இதில், மாவட்ட பொறுப்பு மந்திரியும், விவசாயத்துறை மந்திரியுமான செலுவராயசாமி கலந்துகொண்டு, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிறந்த மனிதனை...
ஒரு ஆசிரியர் தாய்க்கு சமமானவர். குழந்தைகளை சரியாக வழி நடத்துவதில் ஆசிரியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தேசத்தை கட்டியெழுப்பும் ஆற்றலையும், வாழ்க்கையின் அறிவையும் கற்பிக்கும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. மாணவர்களின் வாழக்கையை வடிவமைக்க ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பிக்கும் வாழ்க்கை நெறிமுறைகளை மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் நினைவில் கொள்கிறார்கள். இதுவே ஆசிரியர்கள் சக்தி.
ஒரு ஆசிரியரின் பொறுப்பு பெற்றோரை விட பெரியது. மாணவர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை ஆசிரியர்களுடன் செலவிடுகிறார்கள். சமுதாயத்தில் சிறந்த மனிதனை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
மாணவர்களுக்கு தைரியம், நாட்டின் வரலாஜ, எதிர்கால சவால்கள், வாழ்க்கை திறன், பொது அறிவு போன்றவற்றை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கலெக்டர் குமார், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.