அசாம் முதல் மந்திரி பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் இருந்த மைக்கை வளைத்து திருப்பிய நபர் : வைரல் வீடியோ

இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

Update: 2022-09-09 15:09 GMT

ஐதராபாத்,

பாஜகவை சேர்ந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பொதுக் கூட்ட மேடையில் அவர் பாஜக நிர்வாகிகளுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை பாஜக நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்