பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது
தும்பே பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் புறநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ பிரபாகர் மற்றும் போலீசார் தும்பே பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களிடம் ஒருவர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
அவரை போலீசார் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தும்பே அருகே உள்ள மடக்காவைச் சேர்ந்த சோயிப் அக்தர் என்பதும், அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.