தொடா் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

மைசூரு அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-12-18 21:05 GMT

மைசூரு:-

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு தாலுகா வருணா தொகுதிக்குட்பட்ட செட்டள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ெவளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவே அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்தப்பகுதியில் சிறுத்தை ஒன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த சிறுத்தை, கிராமத்தில் உள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடி கொன்று வந்தது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள், அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

கூண்டில் சிக்கியது

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து இரும்பு கூண்டு ஒன்றும் வைத்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சிறுத்தை சிக்கியது பற்றி அறிந்ததும் சுற்றுவட்டார மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டது 3 வயது நிரம்பிய பெண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தைக்கு பரிசோதனை நடத்தி, நாகரஒலே வனப்பகுதியில் விடப்படும் என்றார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்