மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-07-02 20:51 GMT

பெங்களூரு: பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விநாயக் நகர் 5-வது கிராஸ் 3-வது மெயின் ரோட்டில் வாடகை வீட்டில்வசித்து வந்தவர் யசோதம்மா (வயது 75). இவருக்கு மகனும், பேரனும் உள்ளனர். ஆனால் 2 பேரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் வீட்டில் இருந்து யசோதம்மா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் யசோதம்மா இறந்து கிடந்தார்.


இதுபற்றி தகவல் அறிந்ததும் சி.கே.அச்சுக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யசோதம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் யசோதம்மாவை கொலை செய்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, தங்க வளையல்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்