காட்டு பன்றியை பிடிக்க வைத்திருந்த கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை செத்தது

காட்டு பன்றியை பிடிக்க வைத்திருந்த கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை செத்தது.

Update: 2023-02-07 18:45 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பிலகுலா அருகே கொல்லிபைலு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண்கவுடா. விவசாயி. இந்த நிலையில் இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று செத்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் ெதரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதேப்பகுதியில் சிறுத்தை குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப்பகுதியில் அதிகளவு காட்டு பன்றிகள் நடமாடி வருகின்றன. இதனால், காட்டு பன்றியை பிடிக்க மர்மநபர்கள் சிலர், லட்சுமண்கவுடாவுன் விளைநிலத்தில் சுருக்கு கம்பி வேலியை வைத்திருந்தனர். அப்போது உணவு தேடி வந்த சிறுத்தை அந்த கம்பி வேலியில் சிக்கி செத்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், செத்துபோனது 5 வயது பெண் சிறுத்தை ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளர் லட்சுமண் கவுடாவை பிடித்து விசாரித்து வருகிறோம். வேலி அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்