'தி கேரளா ஸ்டோரி' திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் இன்று இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இந்த திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. எனினும், போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதை திரையரங்கங்கள் நிறுத்தி வைத்தன.
இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் இன்று இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏதுவாக உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு படத்துக்கு விதித்த தடையை நீக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.