இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.. காங். தலைவர் பேச்சு

காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

Update: 2022-12-04 06:35 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம், இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு வலுவாகவும், பொறுப்பாகவும், இருக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முடியும். நாம் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

கட்சியில் மிகவும் பொறுப்பான நபர்கள் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்தாலும், பொறுப்பில்லாத சிலரும் இருப்பதாக நினைக்கிறேன். இது சரியல்ல, ஏற்கத்தக்கது அல்ல, தங்கள் பொறுப்பை நிறைவேற்ற முடியாதவர்கள், தங்கள் சக ஊழியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரை வரலாற்றை எழுதுகிறது. இந்த யாத்திரை தற்போது தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

வெறுப்பின் விதைகளை விதைக்கும் மற்றும் பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவது காங்கிரஸ் உறுப்பினர்களின். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த தலைவர்கள் பி சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்