சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டிய விவகாரம்: தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டிய விவகாரத்தில் அவனது தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பத்ராவதி கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

Update: 2023-07-20 18:45 GMT

சிவமொக்கா-

சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டிய விவகாரத்தில் அவனது தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பத்ராவதி கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

வாகன சோதனை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஜன்னாபுரா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது45). இவருக்கு 16 வயதில் மகன் உள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வருகிறான். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பத்ராவதி நியூ டவுன் போலீசார் உத்தி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஸ்ரீகாந்தின் மகன் வந்துள்ளான். அவனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவனிடம் வாகன ஓட்டுனர் உரிமத்தை போலீசார் கேட்டனர். அதற்கு சிறுவன் என்னிடம் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லை என்றும் எனக்கு 16 வயது தான் ஆகிறது என்றும் போலீசாரிடம் கூறியுள்ளான்.

இதையடுத்து போலீசார் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் தந்தையை பத்ராவதி நியூ டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரும்படி போலீசார் சிறுவனிடம் கூறினர்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இதுகுறித்து சிறுவன் வீட்டிற்கு சென்று ஸ்ரீகாந்திடம் கூறினார். இதற்கிடையே போலீசார் 16 வயது சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்ததாக ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த பத்ராவதி கோர்ட்டு நீதிபதி, சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி வழங்கிய தந்தை ஸ்ரீகாந்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 18 வயது நிரம்பாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுக்க மாட்டேன். இனி இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என நீதிபதி முன்னிலையில் ஸ்ரீகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்