இந்தியாவில் உலகே வியக்கும் பிரமாண்டம்.. பிரதமரின் யோசனையில் உதித்த "யஷோ பூமி"

டெல்லி துவாரக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

Update: 2023-09-16 09:56 GMT

டெல்லி,

சமீபத்தில் ஜி-20 மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகள் நடைபெறுவதற்காக பாரத் மண்டபம் எனும் மையம் சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது .அதைப் போலவே தற்போது டெல்லியில் உள்ள துவாரக்காவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி 'யசோ பூமி' எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த மண்டபம் ரூ.5400 கோடி மதிப்பில் சுமார் 8.9 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உலகின் மிகப்பெரிய கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் போன்றவற்றை நடத்தலாம். மேலும் கண்காட்சி மையம் ,வர்த்தக கண்காட்சி மற்றும் பொதுவான கண்காட்சிகள் நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு இங்கு 11 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவில் 13 கூட்ட அரங்குகள் மற்றும் 15 மாநாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஊடக அறைகள்,அதிமுக்கிய பிரமுகர்களுக்கான அறைகள்,பார்வையாளர்கள் தகவல் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.இதன் முன் பகுதியில் நாட்டின் மிகப்பெரிய  ஒளிரும் எல்இடி மீடியா பேகேட்டை கொண்டுள்ளது.

இதன் கட்டிடத்தின் மையத்தில் 6 ஆயிரம் விருத்தினர்கள் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுமையான தானியங்கி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக இந்த யசோ பூமி நூறு சதவீதம் கழிவு நீர் மறுசுழற்சி மற்றும் மழைநீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த மையத்தின் முதல் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை காலை 11 மணி அளவில் திறந்து வைக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்