அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன்:-
ஹாசன் டவுன் குவேம்புநகர் படாவனே 2-ஸ்டேஜ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஹேமலதா. அரசு வேலைக்கு எதிர்நோக்கி காத்திருந்தார். அப்போது சமீர் மாலிக் என்பவர் நாகராஜ் மனைவி ஹேமலதாவிற்கு பழக்கமாகினார். அவர் தனக்கு தெரிந்த நபர் மூலம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பல லட்சம் வரை வாங்கியுள்ளார். 3 மாதங்கள் கடந்ததும் சமீர் மாலிக் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை கேட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சமீர் மாலிக் தனது மனைவி சாபியா, மகன் பைஜான் ஆகியோருடன் சேர்ந்து ஹேமலதாவை மிரட்டி அனுப்பினர். இதனால் கோபம் அடைந்த ஹேமலதா ஹாசன் படாவனே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் சமீர் மாலிக்ைக போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஹாசன் படாவனே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.