ஸ்கூட்டரை ஓட்டி சென்றபோது விபத்து: சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம்
ஸ்கூட்டரை ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கியதால் சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து பண்ட்வால் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சித்தகட்டே பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிறுமி ஓட்டி சென்ற ஸ்கூட்டரும், காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சிறுமிக்கு ஸ்கூட்டரை ஓட்ட கொடுத்த அவரது தாய் மீது பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக பண்ட்வால் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 வயது நிரம்பாத சிறுமிக்கு ஸ்கூட்டரை ஓட்ட கொடுத்தது தவறு என்றும், இதனால் சிறுமியின் தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.