அந்தரத்தில் சுழன்று கொண்டே 50 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கிய ராட்சத ராட்டினம் - கதிகலங்க வைக்கும் காட்சி...!
மொகாலியில் 50 பேருடன் அந்தரத்தில் சுழன்ற ராட்சத ராட்டினம் தரையில் விழுந்து நொறுங்கியதில் பலர் காயம் அடைந்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கண்காட்சியின்போது, சுமார் 50 பேருடன் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத ராட்டினம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம், செங்குத்தான அச்சில் சுழன்றுகொண்டு உயரத்திற்கு சென்றது. பின்னர் கீழே வரும்போது திடீரென ராட்டினம் உடைந்தது.
அச்சில் இருந்து வேகமாக கீழே வந்த ராட்டினம் தரையில் பயங்கரமாக மோதியது. இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பதைபதைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என டிஎஸ்பி தெரிவித்தார்.