இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று மத்திய மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-29 18:45 GMT

மண்டியா:

58 கோடி இளைஞர்கள்

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் எரிசக்தி மற்றும் கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் கலந்துகொண்டார்.

அப்போது அவர், மாணவர்களுடன் கலந்துரையாடி பேசியதாவது:- நம் நாட்டின் இளைஞர்கள் மிகவும் வலுவானவர்கள். 58 கோடி இளைஞர்களை கொண்ட மிகப்பெரிய நாடு என்ற பெருமை நமக்கு உள்ளது. இளைஞர்கள்தான் நாளை நம்நாட்டின் எதிர்காலம். அவர்கள் கையில்தான் இந்தியா உள்ளது. பிரதமர் மோடியும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் ''ஆத்ம நிர்பார் பாரத் திட்டம்'' இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

புதிய தேசிய கல்வி கொள்கை

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய தேசிய கல்வி கொள்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதேபோல சிறு,

குறு தொழில்களை ஊக்குவிப்பதுடன், சுயவேலை வாய்ப்புகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தொழில் நூட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு முன்னேறி செல்லவேண்டும். இதற்காக அனைத்து துறைகளும் டிஜிட்டல் முறையாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நூட்பத்தை பயன்படுத்தி இளைஞர்கள் நம்நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்லவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்