மங்களூருவில் மீண்டும் மீன்பிடி தொழில் தொடங்கியது; மீன்களை வாங்க குவிந்த வியாபாரிகள்
மங்களூருவில் மீண்டும் மீன்பிடி தொழில் தொடங்கியதால் மீன்களை வாங்க வியாபாரிகள் குவிந்தனர்.
மங்களூரு;
கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை மாதமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். குறிப்பாக பந்தர் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீன்வர்கள் கடலுக்குள் சென்றனர்.
இந்த மீனவர்கள் பிடித்த மீன்கள் அனைத்தும் நேற்று பந்தர் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இது தவிர ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களிலும் இருந்தும் மீன்வர்கள் மீன்களை பிடித்து வந்து பந்தர் துறைமுகத்தில் விற்பனை செய்தனர். இதனால் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.