அனைத்து மகளிருக்கான முதல் ஹஜ் விமானம் இந்தியாவில் இருந்து ஜெட்டாவுக்கு புறப்பட்டது

இந்தியாவின் கோழிக்கோடு நகரில் இருந்து மகளிர் மட்டும் பயணிக்கும் முதல் ஹஜ் விமானம் ஜெட்டாவுக்கு இன்று புறப்பட்டு சென்றது.

Update: 2023-06-08 17:47 GMT

கோழிக்கோடு,

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக புனித ஹஜ் பயணம் கருதப்படுகிறது. இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள்.

இந்நிலையில், இந்தியாவின் கோழிக்கோடு நகரில் இருந்து மகளிர் மட்டுமே செல்ல கூடிய முதல் ஹஜ் விமானம் ஜெட்டா நகருக்கு இன்று புறப்பட்டு சென்றது.

இதன்படி, இன்று மாலை 6.45 மணியளவில் புறப்பட்ட ஐ.எக்ஸ். 3025 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மொத்தம் 145 மகளிர் பயணித்தனர். அந்த விமானம் 10.45 மணியளவில் ஜெட்டாவை சென்றடையும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து செல்ல முடியாததால் கொச்சியில் இருந்து சென்றனர்.

3 ஆண்டுகளுக்கு பின் புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு 128 பெண்கள் உள்பட 254 பேருடன் நேற்று புறப்பட்டு சென்றது. 2-வது விமானத்தில் 150 பேர் புறப்பட்டனர்.

புனித பயணம் செல்பவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தீன், விமான நிலைய இயக்குனர் தீபக் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்