3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2023-01-18 10:01 GMT

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்.16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. மறுபரிசீலனை ஜன.31-ம் தேதியும், வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்.2-ம் தேதியும் கடைசி நாளாகும்.

இதேபோன்று, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கு பிப்.27-ம் தேதியும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி தேர்தல் நடைபெறும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்