கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும் - பிரியங்கா காந்தி
தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.. இது நாட்டை ஒன்றிணைக்கும் அரசியலின் வெற்றி.
கடின உழைப்பாளிகள் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பலனளித்தது.
கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும். என பதிவிட்டுள்ளார்.