இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய கார் டிரைவர் தலைமறைவு
சித்ரதுர்கா அருகே திருமண ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி கார் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
சிக்கமகளூரு:-
இளம் பெண்ணுடன் பழக்கம்
சித்ரதுர்கா மாவட்டம் தாசரஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 30). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தனியார் வாடகை கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் அருகே 28 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இந்த பெண் அடிக்கடி பிரசாந்த் காரில்தான் வெளியே சென்று வந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் பிரசாந்த் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
திருமணத்திற்கு மறுப்பு
இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். இதை உறுதி செய்த அந்த பெண், பிரசாந்திடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் பிரசாந்த மறுத்துவிட்டார். மேலும் இளம் பெண்ணை சந்திப்பதை பிரசாந்த் நிறுத்திவிட்டார். மேலும் பிரசாந்த் தலைமறைவாகிவிட்டார்.
தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அந்த இளம்பெண் இதுபற்றி சித்ரதுர்கா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பிரசாந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.