காதலியின் 7 மாத கருவை கலைத்த கொடூரம்

திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்து, காதலியின் 7 மாத கருவை கலைத்த கொடூரம் நடந்துள்ளது.

Update: 2023-03-07 20:35 GMT

சோழதேவனஹள்ளி,

பலாத்காரம்

பெங்களூரு சோழதேவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகர்(வயது 30). இவர் கணினி பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் உள்ள கணினிகளை பழுது பார்க்க சென்றார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கும், சாகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்தனர். அந்த சமயத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் சில நேரங்களில் சாகர், இளம்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பலமுறை முறை பலாத்காரம் செய்தார். இதனால் இளம்பெண் 7 மாத கர்ப்பிணி ஆனார். இதுகுறித்து அவர் தனது காதலனிடம் கூறினார். அப்போது சாகர், கருவை கலைக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்தார்.

போலீசில் புகார்

இதையடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து மாத்திரை கொடுத்து, சாகர் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் அவரது வயிற்றில் இருந்த 7 மாத கரு கலைந்தது. இதன்பின்னர், இளம்பெண் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு சாகரை கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு சாகர் மறுத்துள்ளார். மேலும் தலைமறைவானார். அவரை இளம்பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இளம்பெண் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாகரை தேடி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்