மந்திரி உமேஷ்கட்டி மரணம்: பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு 2-வது முறையாக ரத்து

மந்திரி உமேஷ்கட்டி மரணம் எதிரொலியால் பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-07 21:41 GMT

பெங்களூரு: உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையொட்டி கர்நாடகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசால் திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று(வியாழக்கிழமை) தொட்டபள்ளாபுராவில் நடைபெற இருந்த ஆளும் பா.ஜனதா அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்த ஆளுங்கட்சியின் ஆக்ரோஷத்தால் அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. தற்போது மந்திரி உமேஷ் கட்டி மரணம் அடைந்ததால் பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்