அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி: ராகுல் காந்தி

விவசாயிகள், பெண்களின் குரலை உயர்த்தியுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-30 16:18 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி. நாட்டின் மகத்தான மக்களையும் வணங்குகிறேன். இந்தியா கூட்டணி அமையும் என அஞ்சா நெஞ்சமுள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தவறாக பிரதமர் திசை திருப்ப முயன்றும் பொது நலன் சார்ந்த பிரச்சினையில் போராடி வென்றுள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலின மக்களின் குரலை உயர்த்தியுள்ளோம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்