தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரெயில் பாதை திட்டம் ஆய்வுக்கு அனுமதி

தஞ்சாவூர் – விழுப்புரம் இரட்டை வழி அகல ரெயில் பாதை திட்ட ஆய்வுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 09:29 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இற்கிடையில், வழக்கம்போல நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ராமலிங்கம், விழுப்புரம் – தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதம் குறித்தும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் கொரோனாவால் மாற்றப்பட்ட சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றப்படுவது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளித்து மக்களவையில் பேசிய மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட 193 கி.மீ. தூர இரட்டை ரயில்பாதைக்கு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான கள ஆய்வு முடிந்து, தற்போது ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்