செலுவராயசாமி கோவிலில் நடந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு தடை

மேல்கோட்டையில் உள்ள செலுவராயசாமி கோவிலில் நடந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் மதுபாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதால், அந்த படப்பிடிப்புக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

மண்டியா:

கோவிலில் மதுபாட்டில்

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. இவர் நடித்து வரும் '302' படத்தின் படப்பிடிப்பு மண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற செலுவராயசாமி கோவிலில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகளை படமாக்க குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த அவர்கள், மதுபான பாட்டில்களை படப்பிடிப்பிற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவில் நிர்வாகிகள் உடனே படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் மதுபான பாட்டில்களை அப்புறப்படுத்தும்படி கூறிய அவர், படப்பிடிப்பு நடத்த அனுமதி தர முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

படப்பிடிப்புக்கு தடை

மேலும் இது குறித்து பாண்டவபுரா துணை கோட்ட அலுவலருக்கு தகவல் அளித்தனர். அவர் போலீசாருடன் சென்று படக்குழுவினரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். அதே நேரம் மாவட்ட கலெக்டரும் படப்பிடிப்பிற்கு அளித்த அனுமதியை உடனே வாபஸ் பெற்றார். இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து சென்றனர். இதற்கு முன்பு இதேபோன்று படப்பிடிப்பு நடந்த போது, சாமி சிலையை மறைக்கும் அளவிற்கு செட்டிங் செய்திருந்தனர்.

மேலும் சாமியை அவமதிக்கு வகையில் படக்குழுவினர் நடந்து கொண்டதால் 6 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்