பிரஜா சாந்தி கட்சியில் இணைந்த தெலுங்கு பட நடிகர் பாபு மோகன்

பிரஜா சாந்தி கட்சியில் இணைவது என்ற முடிவால், அவருடைய அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2024-03-04 15:21 GMT

ஐதராபாத்,

தெலுங்கு பட நடிகர் மற்றும் முன்னாள் மந்திரியான பாபு மோகன், பிரஜா சாந்தி கட்சியில் இன்று முறைப்படி இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் கே.ஏ. பால் முன்னிலையில் சேர்ந்த மோகனுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்ததற்காக, பால் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.

இதன்பின்னர், இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாபு மோகன், பிரஜா சாந்தி கட்சியின் பிரதிநிதியாக, மக்களவை தேர்தலில் வாரங்கால் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறேன் என கூறினார்.

இதற்காக விரைவில் பிரசாரத்தில் ஈடுபட போகிறேன் என கூறிய அவர், வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

பா.ஜ.க.வில் இருந்து கடந்த மாதம் பாபு மோகன் விலகினார். கட்சியில் உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என கூறினார். பிரஜா சாந்தி கட்சியில் இணைவது என்ற முடிவால், அவருடைய அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்