தெலுங்கானாவில் செப்-26 முதல் 14 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

தெலுங்கானாவில் தசரா பண்டிகையையொட்டி செப்டம்பர் 26 முதல் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-09-14 14:56 GMT

ஐதரபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா பண்டிகை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கொண்டாடப்படாமல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.இந்த ஆண்டு தசரா பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தசரா விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.அதே சமயம் தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகை அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்